சிவகாசி:சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு விழா நாளை (அக். 3) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காலை 6:00 மணிக்கு சுவாமி ஊஞ்சளில் காட்சியளிப்பதோடு விழா துவங்குவதோடு, 7:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.. இரவு 7:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து காட்சியளிப்பார். 15 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கிளி வாகனம் , அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சட்ட தேரோட்டம் ஆக. 11 ம், தபசு காட்சியளித்தல் ஆக. 12 , பூப் பல்லாக்கு ஆக. 13ல் நடைபெறுகிறது. ஆக. 17 ல் உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் விழா முடிவுறும்.