டி.என்.பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2019 03:08
புதுச்சேரி: தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், செடல் பிரம்மோற்சவ விழா நேற்று (ஆக., 1ல்)கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, 31ம் தேதி காலை 9.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று (ஆக., 1ல்) காலை 7.00 மணிக்கு கரகம் எடுத்தல், மதியம் 1.00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6.00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான செடல் திருவிழா, வரும் 9ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடக்கிறது.