பதிவு செய்த நாள்
05
ஆக
2019
02:08
சென்னை: மேற்கு தாம்பரம், நாகேஸ்வரி அம்மன் கோவில், ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.சென்னை, மேற்கு தாம்பரம், முத்துரங்கம் பூங்காவில், நாகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலின், 46ம் ஆண்டு ஆடி திருவிழாவும்; 21ம் ஆண்டு பிரம்மோற்ச வமும், ஜூலை, 26ல் துவங்கின.
அன்று காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.இதையடுத்து, அம்மனுக்கு, தினமும், காலை மற்றும் மாலை, சிறப்பு ஹோமமும்; காலை சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன், மஹாதீபாராதனை யும்; மாலை, 6:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும் நடந்தன.
இம்மாதம், 3ம் தேதி, காலை, தேர் அலங்காரத்துடன், அம்மன் திருவீதி உலா நடந்தது.நேற்று (ஆக., 4ல்) மதியம், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, சிங்க வாகன அலங் காரத்துடன் அம்மன், குளக்கரையில் இருந்து, தீ மிதிக்கும் பக்தர்களுடன், திருவீதி உலா வந்து, தீ மிதி திருவிழா நடந்தது.இன்று (ஆக., 5ல்) காலை, 10:00 மணிக்கு, நாகேஸ்வரி அம்மனுக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்குமாறு, கோவில் தர்மகர்த்தா எம்.சி.ஜெயராம் நாயுடு, கோவில் அர்ச்சகர் எம்.சத்தியா தெரிவித்துள்ளனர்.