பதிவு செய்த நாள்
05
ஆக
2019
03:08
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி, ரயில் நிலையம் அருகில், என்.ஜி.ஓ., காலனியில், மாமர சுயம்பு சித்தி விநாயகர், லலிதாம்பிகை சமேத மாமரத்து ஈஸ்வரர் கோவில் உள்ளது.
இதன் வளாகத்தில், முத்துமாரி அம்மன் கோவிலில், ஆடிப்பூர விழாவில், நேற்று முன்தினம் (ஆக., 3ல்), திருவாடிப்பூர திருவிளக்கு பூஜை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, நேற்று, கோவில் அருகில், 108 பால்குட ஊர்வலத்தை, அறங்காவலர் சீனிவாசன், தலைமை அர்ச்சகர் முத்துகுமார் சிவச்சாரியார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அங்கு துவங்கிய ஊர்வலம், கோவிலை வந்து அடைந்தது. அதன் பின், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ்வார்த்தலும் நடை பெற்றது. விழாவில், கூடுவாஞ்சேரி மட்டும் இன்றி, பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.