பதிவு செய்த நாள்
05
ஆக
2019
03:08
புன்செய்புளியம்பட்டி: ஆடிப்பூர விழாவையொட்டி, புன்செய்புளியம்பட்டி, அம்மன் கோவில் களில் நேற்று (ஆக., 4ல்) சிறப்பு வழிபாடு நடந்தது. புன்செய்புளியம்பட்டி, மாரியம்மன், ஊத்து க்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன், சவுடேஸ்வரி யம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைகளுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. மாரியம்மன், பிளேக் மாரியம்மனுக்கு, 1,008 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: ஈரோடு மாநகராட்சி, 41வது வார்டு அண்ணாநகரில் உள்ள, வேப்பிலை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி, மூலவர் அம்ம னுக்கு, 16 திரவிய அபிஷேகம் நடந்தது, அதைத்தொடர்ந்து, வளையல் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில், நான்கு கர்ப்பிணிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வளைகாப்பு நடத்தப்பட்டு, ஏழு வகையான உணவு வழங்கப்பட்டது.