திருப்புத்தூர் :திருப்புத்தூர் அருகே ரணசிங்கபுரத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. கோடையில், இங்குள்ள இரட்டை கண்மாயில் நீர் வற்றிகாணப்பட்டது. இதனால், இதில் வளர்ந்துள்ள மீன்களை பிடிக்கும் திருவிழா நடத்த முடிவு செய்தனர். அனைத்து கிராம மக்கள் நேற்று அழைக்கப்பட்டனர். காலை 7 மணி முதல் 11 மணி வரை ஏராளமானவர்கள் மீன்பிடித்தனர். கிராம பெரியவர் மூர்த்தி துவக்கி வைத்தார். விறால், குறவை, சல்லிக்கண்டை, கெழுத்தி மீன் வகைகள் அதிகளவில் பிடிபட்டன.