காரைக்கால் :காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் 16ம் ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. ரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், பக்த ஜனசபா சார்பில் 16ம் ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. காலை 8 மணிக்கு நிர்மலா ராமசாமி, கருடகொடி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து 8.10 மணிக்கு திருமால் துதி, 8.15 மணிக்கு நித்ய கல்யாண பெருமாள் பக்தஜன சபா தலைவர் ரங்கநாதாச்சாரியார் வரவேற்றார். திருச்சித்திர கூடம் முனைவர் ரங்காச்சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கினார். ஸ்ரீதர் ஜீயர் சாமிகள் முன்னிலை வகித்தார். ங்கடாசலம் ஆண்டறிக்கை வாசித்தார். ஸ்ரீரங்கம் வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார், கிருஷ்ணகிரி சடகோப ராமானுஜ ஸ்வாமிகள் சிறப்பு சொற்பொழிவாற்றினர். அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைதம்பி ஆகியோர் செய்திருந்தனர்.