பதிவு செய்த நாள்
06
ஆக
2019
02:08
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று, (ஆக., 5ல்) 108 திருவிளக்கு பூஜை நடந்தது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அம்மனுக்கு தொடர் ந்து அபிஷேக அலங்கார பூஜை நடந்து வந்தன.
எட்டாம் நாள் நடந்த குண்டம் இறங்கும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதி த்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று (ஆக., 5ல்)காலை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை துவங்கியது. தனசேகர், கண் ணன், விஜய் ராம கிருஷ்ண குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
பரம்பரை அறங்காவலர் வசந்தா, கட்டளை தாரர்கள் கனகராஜ், செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று (ஆக., 6ல்) மறு பூஜை, அபிஷேக அலங்கார பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் ஹர்சினி மற்றும் பணி யாளர்கள் செய்துள்ளனர்.