பதிவு செய்த நாள்
06
ஆக
2019
02:08
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய உறுதி ஏற்கப்பட்டது.
கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி கூட்டம், துடியலுாரில் நடந்தது; மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
பொறுப்பாளர்கள் ஜெய்கார்த்தி, தம்பி சரவணன், அசோக்செல்வம், முத்துகுமார், ஜீவானந்தம், தினேஷ் முன்னிலை வகித்தனர்.வரும், செப்., 4ல் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி யன்று, 250 இடங்களில் விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு, விசர்ஜன ஊர்வலம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
துடியலுார் பஸ் ஸ்டாண்டில் கலாசார நிகழ்ச்சி நடத்துவது, சதுர்த்தி விழாவுக்கு, இலவசமாக மின்சாரம், பந்தல் அமைத்த தர, தமிழக அரசை கேட்டுக்கொள்வது என, தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. துடியலுார், கவுண்டம்பாளையம், தடாகம், சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.