பதிவு செய்த நாள்
06
ஆக
2019
02:08
புதுச்சேரி: கருட பகவான் ஜெயந்தி, கருட ஸ்தலமான கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வரும் 7ம் தேதி நடக்கிறது.
’வானத்தில் கருட பகவானை பார்ப்பதும், அவரது குரல் கேட்பதும் விசேஷம்’ பக்தர்களுக்கு ’அறம், பொருள், இன்பம், வீடு’ எனும் நால்வகை பலனையும் ஒருசேர அருள்பாலிப்பவர் இவர்.கருடாழ்வரின் மகிமைகள்கடலுார் திருவந்திபுரம் வேதாந்த தேசிகருக்கு ஹயக்ரீவ மூர்த்தியை அருளியதோடு, பல்வேறு வடிவங்கள் எடுத்து பல தொண்டுகள் புரிந்தவர். தன்னை துதிப்பவர்களுக்கு ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம் தேஜஸ் போன்றவ ற்றை வாரி வழங்குவதுடன், மனிதர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது கருட பகவானின் மந்திரம்.ராம ராவண சண்டையில் பெருமானையும், இளைய பெருமாளையம் தானே வந்து நாகபாசத்திலிருந்து விடுவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாளுடன் கூடிய பெருமாள் உள்ள கருவரையில் இவருக்கு சம ஆசனம் தரப்பட்டுள்ளது.திருமாலை எழுந்தருள செய்தவர்திருப்பதி வைகுண்டத்தில் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாஜலத்தை கொண்டு வந்து, அதில் திருமாலை எழுந்தருளச் செய்தார். இதுவே, திருப்பதியில் பெருமாள் எழுந்தருளியுள்ள ஆனந்த நிலைய விமான மாகும். திருப்பதியில் உள்ள சப்த கிரிகளில் ஒன்றுக்கு கருடாச்சலம் என்று பெயர்.
இவரது நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது ஐ தீகம். கருட பகவான் பறக்கும் நிலையை தரிசிப்பது, கோடி நன்மை பயக்கும் கோபுர தரிசனத்திற்கு சமம். இத்தகையை சிறப்புடைய கருட பகவான் ஜெயந்தி, கருட ஸ்தலமான கடலுார் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில் நாளை 7ம் தேதி நடக்கிறது.
நாளை காலை 7:00 மணிக்கு வேத மந்திரத்துடன் கூடிய கருட மஹா யாகம், மகா திருமஞ்சன மும், இரவு 7:00 மணிக்கு புஷ்ப யாகம், சுவாமி புறப்பாடு நடக்கிறது.