ஆர்.எஸ்.மங்கலம்:முன்னதாக மூலவர் யோக நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது.
இதில் மாங்கல்ய, குங்கும அர்ச்சனை செய்து பெண்கள் வழிபாடு செய்தனர். விழாவில் முன் னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஆனந்த், டாக்டர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்சிகளும், அன்னதானமும் நடைபெற்றது.