பதிவு செய்த நாள்
06
ஆக
2019
02:08
குளித்தலை: ஈச்சம்பட்டி கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி கோவில் பெரும் பூஜை விழாவை யொட்டி, சாமியாடிகள் காவிரி ஆற்றில் கரம் பாலித்து வந்தனர். குளித்தலை அடுத்த, ஈச்சம் பட்டியில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் முப்பூஜை பெருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் (ஆக., 4ல்) இரவு கோவில் வீட்டு சாமி படைத்தல் நடந்தது. நேற்று (ஆக., 5ல்) மாலை, குளித்தலை காவிரி ஆற்றில், கிராம பொது மக்கள், கோவில் சாமியாடிகள், பக்தர்கள் கரகம் பாலித்து, சுவாமியை சுமந்து, ஊர்வல மாக கோவில் வந்தடைந்தனர். இன்று (ஆக., 6ல்) இரவு காட்டுக்கோவில் பொங்கல் வைத்து எரி பூஜை நடக்கிறது. நாளை (ஆக, 7ல்)காலை கிடா வெட்டு, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறை வடைகிறது.