சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள நாகதேவதை கோவிலில், நாகபஞ்சமி விழா நேற்று (ஆக., 5ல்) நடந்தது. காலை, 9:00 மணிக்கு புண்யாஹவாசனம், சங்கல்பம், ராகு, கேது ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. 10:00 மணிக்கு நாகதோஷ நிவர்த்திக்காக, திருக்குடநீர், பால், மஞ்சள் அபிஷேகம், நாகதேவிக்கு, சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆடை, செவ்வரளி மாலையில் சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.