கள்ளக்குறிச்சி:மழை வளம் பெற வேண்டி கள்ளக்குறிச்சி கடைவீதியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஸ்ரீவித்யா, நவா வரண மங்கள 5வது ஸ்ரீசண்டி யாகம் இன்று(5 ம் தேதி) காலை 7 மணிக்கு துவங்குகிது.
மாலை 5 மணிக்கு மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி கலச ஆவாகனங்கள் செய்து யாகங் கள் வளர்க்கப்படுகிறது. 6 ம் தேதி காலை மாலை சண்டியாகம் மற்றும் லட்சார்ச்சனை நடக்கி றது. 7 ம் தேதி காலை 7 மணிக்கு வேதிகா அர்ச்சனை, சுவாசினி, கன்னியா வடு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து சண்டியாகம் நிறைவு செய்யப்பட்டு 11 மணியளவில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சண்டியாக கலசாபிஷேகம் நடக்கிறது. அவினாசி தேவிஉபாசகர் நாகசுந்தர சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் சண்டியாகத்தை செய்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி ஆர்ய வைஸ்சிய சங்கத்தினர் செய்துள்ளனர்.