மகாலட்சுமிக்கு எட்டு (அஷ்டம்) விதமான கோலங்கள் உண்டு. துன்பத்தில் துணை நிற்கும் ஆதிலட்சுமி, குழந்தை பாக்கியம் தரும் சந்தான லட்சுமி, கல்வி வளம் தரும் வித்யாலட்சுமி, செல்வம் தரும் தனலட்சுமி, தானியம் தரும் தானிய லட்சுமி, பதவி தரும் கஜலட்சுமி, துணிச்சல் தரும் வீரலட்சுமி, வெற்றி தரும் விஜயலட்சுமி என இந்த எட்டும் வாழ்வின் அடிப்படை தேவைகளை தருபவர்கள் ஆவர். இவர்களுடன் ஒன்பதாவதாக இணைபவள் வரலட்சுமி. சுமங்கலி பாக்கியம் அளிப்பவள் இவள். திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு இவளை வழிபடுகின்றனர்.