வரலட்சுமி விரதம் இருப்பவர்கள், வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைக்க வேண்டும். மஞ்சள் அல்லது சந்தனத்தில் வரலட்சுமியின் முகம் செய்து, தாழம்பூ உள்ளிட்ட வாசனைபூக்களைச் சூட்டி, மஞ்சள் ஆடை, காதோலை, கருகமணி மாலையை அணிவியுங்கள். நூல் சுற்றிய குடத்தில் புனிதநீரை நிரப்பி, அதற்கு குங்குமம் வைத்து, மாவிலை, தேங்காயால் அலங்கரிக்க வேண்டும். வாழை இலை விரித்து பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கும்பம், வரலட்சுமி முகத்தை வைக்க வேண்டும். மற்றொரு இலையில் மஞ்சள் கயிறு, மோதகம், அப்பம், வடை படைத்து வழிபட வேண்டும். புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து அணிய வேண்டும். வழிபாடு முடிந்த பின்னரே சாப்பிட வேண்டும். இதனால் சுமங்கலி பாக்கியம், சகல சவுபாக்கியம் வாழ்வில் உண்டாகும்.