திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சோழமா நகரில் உள்ளது அன்னை ராஜராஜேஸ்வரி கோயில். செய்வினைகள் அகல, கண் திருஷ்டி படாமல் இருக்க அன்னையின் கரத்தில் உள்ள முடிகயிறை பிரார்த்தனை செய்து பக்தர்களின் கரத்தில் கட்டுகின்றனர். இதனால் தீய சக்தியின் பாதிப்பு நீங்கும் என்பது காலம்காலமாக உள்ள நம்பிக்கை.