சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2019 02:08
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்ததுமங்களூரில் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 30ம் தேதி பூ போடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, அலகு குத்துதல், பால்குடம் ஊர்வலம் மற்றும் தினசரி அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் (ஆக., 5ல்) காலை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பின்னர், மாலை 4:00 மணியளவில் அலங்கரிக்கபட்ட தேரில் முத்துமாரியம்மன் வீதியுலா வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்தனர்.