செஞ்சி : செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.
அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு ரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. 8:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் ஸம்வத்ஸரா ஹோமமும்; தொடர்ந்து கலசாபிஷேகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ரேணுகாம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பதினாறு வகையான ஊபசாரங்களுடன், கற்பூர ஆரத்தி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.