Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெட்டப்பாக்கம் மதுரை வீரனுக்கு சாகை ... அழகர்மலை முருகன் கோயிலில் சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில்வரும் 11ம் தேதி 2000 லிட்டர் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2019
02:08

புதுச்சேரி:பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி அடை வதை முன்னிட்டு, வரும் 11ம் தேதி, அனைத்து சன்னதிகளிலும் 2000 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயகர் கோவிலில், அமைந்துள்ள வலம்புரி மகாகணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரிவேங் கடாசலபதி மற்றும் பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமிக்கு கடந்த ஜூன் 23ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.

அதைத் தொடர்ந்து, ஜூன் 24ம் முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிேஷகம் நடந்து வருகிறது. வரும் 11ம் தேதி, மண்டலாபிஷேகம் பூர்த்தி அடைவதை முன்னிட்டு, வரும் 10ம் தேதி, காலை 7:00 மணி முதல் பகவத்ப்ராத்தனை, சங்கல்பம், அக்னிமதனம், நவகலச ஸ்தாபன ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது.

வரும் 11ம் தேதி காலை கோ பூஜை மற்றும் ஹோமங்களும், காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் அனைத்து சன்னதிகளுக்கும், 2000 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, பூர்ணாஹூதி மற்றும் கட திருமஞ்சனம் நடக்கிறது.காலை 9:00 மணிக்கு மேல் தாமல் ராமக்கிருஷ்ணனின், ’அனுமனும் ராமனும்’ என்ற தலைப்பில் உபன்யாசம் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு மேல் சிறப்பு திருவாராதனம் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

மாலை 5:00 மணிக்கு ஸ்ரீசீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது.பூஜைகள் அனைத்தும் பஞ்ச முக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலம் நடத்தப்படுகிறது. பூஜையில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்டை அணுகலாம்.ஏற்பாடுகளை ஜெய மாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன், பொருளா ளர் கச்சபேஸ்வரன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar