சிவகங்கை:சிவகங்கை அருகே வல்லனி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்தது.இதையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பெண்கள் பூக்கரகம் சுமந்து வந்து அம்மனை வழிபட்டனர்.பல்வேறு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.