திருப்புத்துார்:திருப்புத்துார் பூக்கடை இந்து,முஸ்லிம் சமுதாயத்தினர் இணைந்து கான்பா சாய்பு பள்ளிவாசலுக்கு சந்தனக் குடம் எடுப்பதையும், ராஜகாளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் பங்கேற்பதும் கடந்த 66 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
நேற்று (ஆக., 8ல்) மாலை முஸ்லிம் நடுத்தெரு பாரம்பரிய வீட்டிலிருந்து சந்தனக்குடம் எடுத்து காந்தி சிலை வழியாக கான்பா பள்ளிவாசலுக்கு சென்றனர். அங்கு பாத்து ஓதி கொடியேற்றம் நடந்தது. இன்று (ஆக., 9ல்) மாலை காளியம்மன் கோயிலுக்கு பால்குடம், தீச்சட்டி, அலகு குத்தியவாறு ஊர்வலமாக சென்றுஅம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய உள்ளனர்.