பதிவு செய்த நாள்
09
ஆக
2019
01:08
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், ’வரலட்சுமி விரதம்’ இன்று (ஆக., 9ல்) நடக்கிறது.
அதையொட்டி, பெரியநாயகி அம்மன், மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை, 9:00 முதல், மதியம், 12:00 மணி வரை, சுமங்கலி பெண்கள் பங்கேற்கும், 108 கலச பூஜை நடக்கவுள்ளது. அதில் பங்கேற்போர், தலைவாழை இலை, அரை கிலோ பச்சரிசி, பித்தளை செம்பு, தேங்காய், பழம், பூ, குங்குமம் ஆகியவற்றை கொண்டு வர, கோவில் நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். விரதமிருந்து, கலச பூஜை செய்தால், கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதோடு, என்றும் சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை என, பக்தர்கள் தெரிவித்தனர்.