பதிவு செய்த நாள்
09
ஆக
2019
01:08
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் காணிக்கை உண்டியல் மூலம் 49 லட்சத்து 67 ஆயிரத்து 826 ரூபாய் காணிக்கை வசூலானது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசை முடிந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது . உண்டி யலில், 49 லட்சத்து 67 ஆயிரத்து 826 ரூபாய், 210 கிராம் தங்கம், 520 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.
அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் பங்கேற்றனர்