பதிவு செய்த நாள்
09
ஆக
2019
01:08
கெங்கவல்லி: கூத்தாண்டவர் கோவில் தேரை, திரளான பக்தர்கள் இழுத்து வந்தனர். கெங்க வல்லி அருகே, தெடாவூரில், கூத்தாண்டவர், செல்லியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. அங்கு, கடந்த ஜூலை, 15ல், 80 நாள் நடக்கும் தேர் திருவிழா தொடங்கியது. கடந்த, 17ல், செல்லியம்மன் சுவாமி தேரை இழுத்து வந்தனர். 19ல், அந்த தேர், கோவிலை அடைந்தது.
கடந்த, 4ல், கூத்தாண்டவர் சுவாமி தேர் திருவிழா தொடங்கியது. நேற்று, (ஆக., 8ல்)200க்கும் மேற்பட்ட பக்தர்கள், அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, கோவிலிலிருந்து, கூத்தாண்டவர் தேரை, முதல் தெரு வரை, திரளான பக்தர்கள் இழுத்து வந்தனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.