பதிவு செய்த நாள்
10
ஆக
2019
02:08
புதுச்சேரி: திரவுபதை அம்மன் கோவிலில் நடக்கும் அக்னி வசந்த திருவிழாவில், தீமிதி திருவிழா நேற்று (ஆக., 9ல்) கோலாகலமாக நடந்தது.புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் தெருவில், பழமைவாய்ந்த, திரவுபதை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, அக்னி வசந்த திருவிழா, கடந்த மாதம் 22ம் தேதியன்று, விக்னேஸ்வர பூஜை, கொடி யேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது.முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று (ஆக., 9ல்) நடந்தது.
விழாவை முன்னிட்டு, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள கோவிலில் இருந்து அம்மன் திருத்தேரில் முத்தியால்பேட்டைக்கு புறப்பாடு நடந்தது.அங்குள்ள வெள்ளவாரி வாய்க்கால் அருகே, தீமிதி திருவிழா நடந்தது. பூங்கரகத்தை தொடர்ந்து, பக்தர்கள் தீமிதித்தனர்.விழாவை முன்னிட்டு, ஈஸ்வரன் கோவில் வீதியில் இளைஞர்கள் அன்னதானம், நீர் மோர் வழங்கினர்.