Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பச்சையம்மன் கோவிலில் தீமிதி விமாிசை ஆதிபராசக்திக்கு 5004 கஞ்சி கலய ஊர்வலம் ஆதிபராசக்திக்கு 5004 கஞ்சி கலய ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் தெப்பம், சரவணப்பொய்கையை மீட்க சிறப்பு திட்டம்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் தெப்பம், சரவணப்பொய்கையை மீட்க சிறப்பு திட்டம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
12:08

மதுரை: மதுரை வைகை ஆறு, மாரி­யம்­மன் தெப்­பக்­கு­ளம், திருப்­ப­ரங்­குன்­றம் சர­வ­ணப்­பொய்­கையை மீட்க 9.4 கோடி ரூபா­யில் சிறப்பு திட்­டத்தை நிறை­வேற்ற மாந­க­ராட்சி நிர்­வா­கம் முடிவு செய்­துள்­ளது. வற்­றாத ஜீவ­ந­தி­யாக விளங்­கிய வைகை, இன்று நக­ரின் பிர­தான கழி­வு­நீர் கால்­வா­யாக திகழ்­கிறது. நக­ரின் வடக்கு பகு­தி­யி­லி­ருந்து அதிக கழி­வு­நீர் ஆற்­றில் கலக்­கிறது. பந்தல்­குடி, விளாங்­குடி, வண்­டி­யூர் கால்­வாய்­களில் இருந்து நேர­டி­யாக கழி­வு­நீர் விடப்­ப­டு­கிறது. குழாய்­கள் மூல­மும் கழி­வு ­நீர் கலக்­கிறது. இரு­பது ஆண்­டு­க­ளாக இந்­நிலை நில­வு­கிறது.

தற்­போது கழி­வு­நீர் கலப்­பதை தடுக்க மாந­க­ராட்சி கமி­ஷ­னர் விசா­கன் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார். வண்­டி­யூர், விளாங்­குடி கால்­வாய் கழி­வு­நீரை சுத்­தி­க­ரிக்க 7.8 கோடி ரூபா­யில் திட்­டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி கால்­வாய்­கள் ஆற்­றில் சந்­திக்­கும் இரு இடங்­க­ளி­லும் சுத்­தி­க­ரிப்பு மையம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இவற்­றின் மூலம் தலா 2 எம்.எல்.டி., நீரை சுத்­தி­க­ரிக்­க­லாம். சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட நீரை சாலை­யோர பூங்­காக்­க­ளுக்கு பயன்­ப­டுத்­த­லாம். மீட்­கப்­படும் மாரி­யம்­மன் தெப்­பம் வண்­டி­யூர் மாரி­யம்­மன் தெப்­பக்­கு­ளத்தை மீட்­க­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. பனை­யூர் வரத்­துக் கால்­வாய் ஆக்­கி­ர­மிப்­பில் சிக்­கி­யுள்­ள­தால் வைகை­யி­லி­ருந்து தண்­ணீர் வரு­வ­தில்லை. இத­னால் வறண்­டுள்­ளது. தெப்­பத்­தி­ரு­வி­ழா­வுக்­காக மட்­டும் தண்­ணீர் நிரப்­பப்­படும். துார்வாரி வரத்­துக்­கால்­வாயை மீட்க ஒரு கோடி ரூபா­யா­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டம் நிறை­வேற்­றப்­பட்ட பின் ஆண்டு முழு­வ­தும் தெப்­பக்­கு­ளத்­தில் தண்­ணீர் இருக்­கும். சலவை, குளி­யல் மையம் துவைப்­பது, குளிப்­ப­தால் மாசு­பாட்­டில் சிக்கிய திருப்­ப­ரங்­குன்­றம் சர­வ­ணப்­பொய்­கையை மீட்க அருகே சலவை மையம், குளி­யல் மைய­மும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. குப்பை, பிளாஸ்­டிக், கழி­வு­கள் சேரா­த­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.  இதற்­கான திட்­டத்­திற்கு 60 லட்­சம் ரூபாய் தேவை என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ரூ.9.4 கோடி தேவை: இம்­மூன்று திட்­டங்­க­ளுக்­கும் 9.4 கோடி ரூபாய் தேவை. இதற்­கான நிதியை மும்பை தனி­யார் நிறு­வ­னம் சி.எஸ்.ஆர்., நிதி­யில் இருந்து தர­வுள்­ளது. இதற்­காக திட்ட அறிக்கை அந்­நி­று­வ­னத்­திற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. ஒப்­பு­தல் கிடைத்­த­தும் பணி­கள் துவங்­கும் என மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar