தேவகோட்டை: தேவகோட்டையில் உள்ள ஆதிபராசக்தி மன்றம் சார்பில் நடந்த ஆடிப்பூர விழாவில் 5004 பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். விழாவை முன்னிட்டு மன்ற தலைவர் பெரியநாயகி தலைமையில் கலசம், விளக்கு வேள்வி பூஜைகள் நடந்தது. பெண்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்தி செலுத்தினர். நேற்று முக்கிய நிகழ்வாக 5004 பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கருதாவூரணி மலைக்கோயில் அருகே துவங்கி நகரின் முக்கிய வீதிகளை சுற்றி, ஆதிபராசக்தி கோயிலை அடைந்தனர். ஊர்வலத்தை கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார். தேவகோட்டை டி.எஸ்.பி., மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.