பதிவு செய்த நாள்
12
ஆக
2019
12:08
உத்திரமேரூர்: சாத்தணஞ்சேரி, பச்சையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, தீமிதி விழா நடைபெற்றது.
உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராம பாலாற்றங்கரையோரம், பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், தீமிதி விழா மற்றும் பாலாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது.அன்று காலை, அம்மனுக்கு அபிஷேக ஆராதானைகளை தொடர்ந்து, மதியம் பாலாபிஷேகம் நடைபெற்றது.இதையடுத்து, பெண் பக்தர்கள், பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டனர். அதை தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள், அப்பகுதி பாலாற்றில் சிறப்பு பூஜைகளை முடித்து, பூங்கரகம் சுமந்து, மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகம் வந்தடைந்தனர். அம்மனை தரிசித்து, தீமிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.