பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
நகரி: சித்துார் மாவட்டம், புத்துார் டவுனில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டு தீமிதி விழா, வெகு விமரிசையாக நடந்தது. கடந்த மாதம், 26ம் தேதி கொடியேற் றத்துடன் விழா துவங்கியது. மொத்தம், 18 நாள் மகாபாரத சொற்பொழிவுடன் நடந்தது.
வெள்ளிக்கிழமை அர்ஜுனன் தபசு, சனிக்கிழமை இரவு தேர் திருவிழா நடந்தது. நேற்று (ஆக., 11ல்) காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச் சியும் நடந்தது.
மாலையில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.இதே போன்று, நகரி அடுத்த, சந்திரா டாவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், 2ம் தேதி, கொடியேற்றத்துடன் தீமிதி விழா துவங்கியது. தொடர்ந்து, மகாபாரத சொற்பொழிவும், 9ம் தேதி அர்ச்சுனன் தபசு, 10ம் தேதி தேர் உற்சவம், நேற்று (ஆக., 11ல்) தீமிதி விழா நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.