பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
ஆர்.கே.பேட்டை:சிறுதானிய பயிரான கம்பு, வரும் விநாயகர் சதுர்த்தி திதியில், விநாயகருக்கு படைப்பதற்காக, பக்தர்களால், பெருமளவில் விரும்பி வாங்கப்படும் என்பதால், விவசாயிகள் கம்பு பயிரிட்டுள்ளனர். தற்போது பூவாக இருக்கும் கதிர், வரும் சதுர்த்திக்குள் முற்றி, கம்பு அறுவடைக்கு தயாராகி விடும்.
விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் விமரிசையாக கொண்டாடினாலும், எளிமையை விரும்பு பவர் தான் விநாயக பெருமான். அருகம்புல், எருக்கன் பூ மாலை என, எளிமையான பூஜை பொருட்களையே ஏற்றுக் கொள்வார்.ஆற்றங்கரையில், அரச மரத்தடியில், விற்றிருப்பார்.
வரும் ஆவணியில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பக்தர்கள் தயாராகி வருகின்றனர். சிலை தயாரிப்பாளர்களிடம், தங்களுக்கு பிடித்தமான விநாயகர் சிலைகளுக்கு இப்போதே முன்பதிவு செய்து வருகின்றனர்; அவற்றின் வளர்ச்சியை நாளும் சென்று நேரில் கண்காணி த்தும் வருகின்றனர்.
அதே போல், சதுர்த்தியில் படையலுக்கு தேவையான வேர்க்கடலை, கம்பு கதிர், விளாம்பழம், களாக்காய் போன்றவற்றில், கம்பு கதிர், வேர்க்கடலை உள்ளிட்டவற்றை விளைவிப்பதில், ஆர்கே.பேட்டை சுற்றுப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கம்பங்கொல்லைகளில், தற் போது, கதிர்களில் பூ பூத்துள்ளன. வரும் சதுர்த்திக்குள், கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகி விடும் என்கின்றனர் விவசாயிகள்.