பண்ருட்டி: பண்ருட்டியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் ஆடிப்பூர விழாவையொட்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.நேற்று (ஆக., 11ல்) காலை 9:00 மணியளவில் பண்ருட்டி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலய ஊர்வலம் துவங் கியது.ஊர்வலத்தை டி.எஸ்.பி., நாகராஜ் துவக்கி வைத்தார். தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் நகர தலைவர் முத்துகிரு ஷ்ணன், முன்னாள் தலைவர் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.