பதிவு செய்த நாள்
12
ஆக
2019
03:08
கிள்ளை: கிள்ளையில் குளுந்தாளம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் நடந்த தெப்ப உற்ச வத்தில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.கிள்ளை விநாயகர், குளுந்தாளம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (ஆக., 10ல்)இரவு தெப்ப உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு கடந்த 5ம் தேதி அம்மனுக்கு கொடியேற்றப்பட்டது.
9ம் தேதி கிள்ளை ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முக் கிய விழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருவிழாவை, முன்னாள் அமைச்சர் சாமியின், சகோதரர் சங்கர் துவக்கி வைத்தார்.விழாவில், கிராம தலைவர் கவியரசன், நிர்வாகிகள் வீரத்தமிழன், சிற்றம்பலம், சிங்கப்பூர் சசிகுமார், முன்னாள் கிராம கமிட்டி தலை வர்கள் நீதிமணி, செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் தேன்மொழி காத்தவராயசாமி, கிராம கமிட்டி தலைவர்கள் காசிராஜன், பூராசாமி, நடராஜன் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.