ஆண்டாள் தமிழகத்துக்கு மட்டுமே உரியவள் என்று யாராவது நினைத்தால் அது தவறு. ஆந்திராவில் உள்ள பெருமாள் கோயில்களிலும் ஆண்டாளை தேவியருள் ஒருவராக காணலாம். ஆண்டாளின் பக்தியும், வாழ்க்கையும் மன்னர் கிருஷ்ணதேவராயரைக் கவர அதன் பலனாக ஆண்டாள் பற்றி ஆமுக்த மால்யதா என்ற பெயரில் 900 பாடல்களில் ஒரு காவியம் படைத்தார். தெலுங்கிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாக இந்த நூல் திகழ்கிறது. அத்துடன் ஆண்டாள் பெயர் தெலுங்கு தேசம் முழுவதும் பரவி கோயிலிலும் இடம்பெற்று விட்டாள்.