பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில் நொண்டி வீரனார் உடன் சப்த கன்னிகள், கருப்பு சாமி பரிவார சாமிகளுக்கு கும்பாபி ஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் (ஆக., 11ல்) மாலை 4:00 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஜை, வாஸ்து சாந்தி, கலச ஸ்தா பனம் ஆகியன நடந்தன.
பின்னர், முதற்கால பூஜை, ஹோமம், இரவு கண் திறப்பு உள்ளிட்டவை நடந்தது.நேற்று (ஆக., 12ல்) காலை, 7:00 மணியளவில், கோ பூஜை, நாடி சந்தானம் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. 9:45 மணிக்கு கலசம் புறப்பாடு, 10:00 மணியளவில் மகா கும்பாபி ஷேகம் நடந்தது.ஆலிச்சிக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கே ற்று வழிபட்டனர்.