திருவண்ணாமலையில் ஆடிப்பூரம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளன்று காலையில் இங்குள்ள வளைகாப்பு மண்டபத்தில் உண்ணாமலையம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் சிறப்பாக நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் இதில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் அவர்களுக்கு தாயாகும் பாக்யம் கிட்டும் என்பது நம்பிக்கை.