கண்டாச்சிபுரம் பச்சைவாழியம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2019 04:08
கண்டாச்சிபுரம்: முகையூர் அடுத்த கொடுங்கால் பச்சைவாழியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.ஆடிமாதத்தையொட்டி குல தெய்வ வழிபாட்டிற்காக பல்வேறு கிராமப்புற கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (ஆக., 12ல்) காலை கொடுங்கால் பச்சைவாழியம்மன் கோவிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காதணி விழா நடத்தினர்.
பின்னர் குலதெய்வ வழிபாடாக பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். அதனைத் தொடர்ந்து பச்சைவாழியம்மனுக்கும், பிரகார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதில், பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.