பதிவு செய்த நாள்
13
ஆக
2019
04:08
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மூன்று நாட்கள், பவித்ரோற் சவம் துவங்கியது.
இக்கோவிலில், இதன் புனித பரிகார நிவர்த்தி, உலக நன்மை கருதி, ஆண்டுதோறும், பவித்ரோற்சவம், மூன்று நாட்கள் நடத்தப்படும்.
இந்த உற்சவம், நேற்று முன்தினம் (ஆக., 11ல்) மாலை, அங்குரார்ப்பணம், ஹோமம், வேத, திவ்யபிரபந்த பாராயணம், பூர்ணாஹூதியுடன் துவங்கியது. நேற்று (ஆக., 12 ல்) காலை, தின வழிபாட்டைத் தொடர்ந்து, ஹோமம், சுவாமி, தேவியர், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு, 108 கலச அபிஷேகம் நடைபெற்றது.மாலை, 4:30 மணிக்கு, சுவாமி, தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்ட மூலவ, உற்சவ சுவாமிகளுக்கு, பவித்திர நுால் சாற்றி, பூர்ணாஹூதி நடைபெற்றது. இன்று (ஆக., 13ல்) காலை, சுவாமிக்கு அபிஷேகம், ஹோமம்; மாலை, 6:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வேத நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமறையுடன், சிறப்பு வழிபாடு நிறைவு பெறுகிறது.