பதிவு செய்த நாள்
14
ஆக
2019
03:08
உடுமலை:சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவிலுக்கு, அரசு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, இந்து முன்னணி ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்து முன்ன ணி குடிமங்கலம் ஒன்றிய விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக்கூட்டம், சோமவாரப்பட்டியில் நடந்தது.
ஒன்றிய பொறுப்பாளர் ராஜேஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பூரணசந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், குடிமங்கலம் ஒன்றியத்தில், 101 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, ஊர்வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், கிராமப்புற கோவில்களுக்கு, சொந்தமான, நிலங்களை, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும்.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள், அருண், தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.