பதிவு செய்த நாள்
14
ஆக
2019
03:08
பெ.நா.பாளையம்:தடாகம் ரோடு, காசி நஞ்சே கவுண்டன் புதுார் பிரிவில் உள்ள, ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில், 8ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா நடந்தது.கடந்த, 8ம் தேதி, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், ஸ்ரீஅஷ்டபுஜ மகா பைரவ ஹோமம், ஸ்ரீ சப்த மாதா சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம், அலங்காரம், குத்துவிளக்கு பூஜைகள் நடந்தன.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் (ஆக., 12ல்) சக்தி கரகம், திருவீதியுலா, திருக்கல்யாணம் வைபவம், பூவோடு எடுத்தல், பால் கரகம் கொண்டு வருதல், நடந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா, நேற்று (ஆக., 13ல்) காலை நடந்தது. இதில், பக்தர்கள் குண்டம் இறங்கினர். அம்மனுக்கு அபிஷேக பூஜை, அன்னதானம் நடந்தது.