திருப்பூர் மகா பெரியவர் பாதுகை தரிசித்த பக்தர் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2019 03:08
திருப்பூர்:காஞ்சி காமகோடி மகா பெரியவரின் திருப்பாதுகையை திருப்பூரில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது ஆச்சார்யார், மகா பெரியவர் என்றழைக்கப்பட்ட, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பயன்படுத்திய பாதுகை நேற்று (ஆக., 13ல்) திருப்பூர் கொண்டு வரப்பட்டது.
ஓடக்காட்டில் உள்ள ராமகிருஷ்ணா பஜனை மடத்தில் வைக்கப்பட்டிருந்த, பாதுகையை பக்தர் கள் தரிசனம் செய்தனர். திருப்பாதுகைக்கு பக்தர்கள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட் டனர். கடந்த முதல் தேதி, நியூ ஜெர்ஸியிலிருந்து, சென்னை வந்த பாதுகை அங்கு பக்தர் தரிசனத்துக்கு பின் கோவை வந்தது. அங்கிருந்து திருப்பூரில் நேற்று (ஆக., 13ல்) பக்தர்கள் தரிசனத்துக்குப் பின் சேலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இம்மாதம் 27ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் பயணிக்கிறது.