பதிவு செய்த நாள்
14
ஆக
2019
03:08
அவிநாசி:அவிநாசி, சீனிவாசபுரம் எல்லை மாகாளியம்மன் கோவிலில், 32வது ஆண்டு பொங்கல் திருவிழா நடந்தது.அவிநாசி எல்லையை காக்கும் தெய்வமாக விளங்கும், சீனிவாசபுரத்தில் உள்ள, எல்லை மாகாளியம்மன் கோவில் விழா, நேற்று முன்தினம் (ஆக., 12ல்) துவங்கியது. நேற்று (ஆக., 13ல்), அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அபிஷேக அலங்காரம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. பின், அன்னதானம் வழங்கப்பட்டது; இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.