சென்னை: அத்திவரதர் சிலையை வெளியில் வைப்பதில், ஆகமவிதிகள் இல்லாததால், தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தென்னிந்திய மஹா சபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 48 நாட்கள் அத்திவரதர் சிலையைதரிசனத்திற்கு வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை. 1979 ல் சிலை எடுக்கப்பட்ட போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், 48 நாள் தரிசன நாட்கள் நீட்டிக்கப்பட்டது எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை(ஆக.,16) நடைபெற உள்ளது.