திருப்புத்துார்: திருப்புத்துார் நடுத்தெரு கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.ஆடி வளர்பிறையில் இந்த திருவிழா துவங்குகிறது. தொடர்ந்து ஒன்பது நாள் விரதம் இருந்து பாரி வளர்த்து அம்மனை வழிபடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பூஜையுடன் தீபாராதனை நடந்தது. முளைப்பாரிகளை கோவிலை சுற்றி வந்து கோவில் வீட்டில் வைத்து விட்டு சென்றனர். நேற்று முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து சீதளிக்குளத்தில் கரைத்தனர்.