பதிவு செய்த நாள்
16
ஆக
2019
02:08
சென்னை:திருமுல்லைவாயில், மன்னாதீஸ்வர பச்சையம்மன் கோவிலில், சந்தனக் காப்பு, புஷ்ப அலங்காரம், ஊஞ்சல் சேவை வைபவம் ஆகியவை, இன்று 16 ல், நடைபெற உள்ளன.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அமைந்துள்ள, மன்னாதீஸ்வர பச்சையம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, அர்த்தஜாம பூஜை ஆகியவை, சிறப்பாக நடத்தப்படுகிறது. தினமும் இரவு, 8:00 மணிக்கு, பள்ளியறை பூஜைநடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தை முன்னிட்டு, ஜூலை 30ல், கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. 2ம் தேதி, திரு விளக்கு பூஜை, ஆடிப்பூரம் ஆகியவைவிமரிசையாக நடந்தது.ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், பச்சையம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.பலருக்கு குலதெய்வமாக விளங்கும் பச்சையம்மன் கோவிலில், கலத்ர தோஷம் நீக்குதல், திருவிளக்கு அருள்வாக்கு, முனீஸ்வரருக்கு வடமாலை சார்த்துதல், பிரதோஷ வழிபாடுஆகியவையும் நடத்தப்படுகிறது.
ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமையைமுன்னிட்டு, இன்று மதியம், 1:00 மணிக்கு, அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, நாதஸ்வர இன்னிசை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, சிவதாசன் குழுவினரின் பக்தி பாடல்களும், இரவு, 8:30 மணிக்கு, ஊஞ்சல் சேவையும், தீபாராதனை வைபவமும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர், சுந்திரமூர்த்தி, பூசாரி அம்பிகாபதி ஆகியோர் செய்துள்ளனர்.