பதிவு செய்த நாள்
16
ஆக
2019
02:08
சென்னை:மகாலட்சுமி நகர், தேவி கருமாரியம்மன் கோவிலில், 40ம் ஆண்டு ஆடித் திருவிழா, இன்று 16ம் தேதி துவங்கி மூன்று நாள் நடக்கிறது.
சேலையூர் அடுத்த மகாலட்சுமி நகர், செல்வி நகரில் அமைந்துள்ள, தேவி கருமாரி யம்மன் கோவிலில், 40வது ஆடி திருவிழா, இன்று 16ம் தேதி துவங்கி, மூன்று நாள் நடக்கிறது.முதல் நாளான இன்று 16ம் தேதி அதிகாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், பூங்கரகம் வீதி உலா, அன்னதானம், அம்மன் வீதி உலாநடக்கிறது.
நாளை காலை, 9:00 மணிக்கு சிறப்புஅபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம் நடக்கிறது. நிறைவு நாளான, 18ம் தேதி அதிகாலை, தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மகா தீபாராதனையும் நடக்கிறது.காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்வு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, 33வது ஆண்டு தீ மிதி திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.