பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.விழாவையொட்டி, பசு மாடு அழை த்து வரப்பட்டு, அங்குள்ள கல்யாண விநாயகர் கோவிலில் பசு மாட்டுக்கு நீராட்டு செய்யப் பட்டு, சந்தனம், குங்கும திலகமிட்டு மாலை அணிவித்து, கொம்புக்கு, வேட்டி, துண்டுகள் கட்டி பூஜை செய்யப்பட்டன.
தொடர்ந்து, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தீர்த்தம், செம்மேடு முத்துமாரியம்மன், சவுடம்பிக்கை அம்மன், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, பண்ணாரி மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. எப்போதும் அமர்ந்த நிலையில் அருள் புரியும் அம்மன், பூஜையின் போது நின்ற கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ் ச்சியில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பரிமாறப்பட்டது.