பதிவு செய்த நாள்
16
ஆக
2019
04:08
நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில், நீண்ட தூர கிரிவலம் துவங்கப் பட்டது. சேந்தமங்கலம் தாலுகா, வடவத்தூரில், 2,700 அடி உயரத்தில் பிரசித்திபெற்ற தலை மலையை சுற்றி பவுர்ணமி முதல் கிரிவலம் நேற்று (ஆக., 15ல்)துவங்கப்பட்டது.
தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில், அதிகாலை, 5:45 மணிக்கு யாக பூஜை நடந்தது. காலை, 7:30 மணிக்கு கிரிவலம் துவக்கப்பட்டது. 27 கி.மீ., கொண்ட கிரிவலப்பாதையானது வடவத்தூர் கிராமத்தின் மலையடிவாரத்தில் துவங்கியது. பெருமாள் வாகனமான வெண்குதிரை முதலில் நடக்க, அதன் பின்னால் அனைவரும் அணிவகுத்து சென்றனர். பக்தர்களுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கப்பட்டது. நடைபாதை இடையில் மோர் உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. கோவில் பரம்பரை தர்மகர்த்தா நந்தகோபன், நிர்வாக அறங்காவலர் ராஜேஷ், எருமப்பட்டி ஜமீன்தார் சேகர், பக்தர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.