பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
பொம்மிடி: பொம்மிடி அருகே, வீரபத்திர சுவாமிக்கு பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த சிக்கம்பட்டியில் உள்ள, குருமன்ஸ் இன மக்கள் வீர பத்திர சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத த்தில், வீரபத்திர சுவாமிக்கு, தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த, 13ல், துவங்கிய ஆடித்திருவிழாவில், நேற்று (ஆக., 15ல்) வீரபத்திரசுவாமிக்கு, தலை யில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில், கோவிலில் இருந்து, வீரபத்திர சுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு, சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடனை செலுத் தினர். விழாவில், பக்தர்களுக்கு சாட்டையடி வழிபாடு நடத்தப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்வாறு, செய்வதன் மூலம், மழை பெய்து விவசாயம் நன்கு செழிக்கும் எனவும், இந்நிகழ்ச்சி பல தலைமுறைகளாக நடந்து வருவதாக, குருமன்ஸ் இன மக்கள் தெரிவித்தனர்.