பதிவு செய்த நாள்
16
ஆக
2019
05:08
பரமக்குடி: சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடந்த ஆடி பிரம்மோற்ஸவ தேரோட்டம் பக்தர் களின் கோவிந்தா கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது.
முன்னதாக இக்கோயிலில் ஆக., 7ல் ஆடிபிரம்மோற்ஸவ விழாகொடியேற்றத்துடன் துவங்கி யது. தொடர்ந்து பத்து நாட்கள் பெருமாள் காலை, மாலை என அன்ன, சிம்ம, சேஷ, கருட, ஹனுமன் வாகனங்களில் வீதிவலம் வந்தார். ஆக., 12ல் இரவு 7:00 மணிக்கு பெருமாள் - ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்றுமுன்தினம் (ஆக., 14ல்) பெருமாள் தவழும் கண்ணனாகவும், இரவு குதிரை வாகனத்தில் கள்ளழகராக அருள்பாலித்தார்.நேற்று (ஆக., 15ல்) காலை சுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏகாந்தசேவையில் தேரில் எழுந்தருளினார். அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 10:00 மணிக்கு தேர் நிலையை விட்டு புறப்பட்டது.
தொடர்ந்து ரதவீதிகளில் வலம் வந்த சுவாமிக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின்னர் 1:00 மணியளவில் தேர் கோயில் வாயிலை அடைந்தது. தொடர்ந்து கோயில் வளாக த்தில் ஆடி வீதியில் வலம் வந்த பெருமாளுக்கு நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் உடன் சென்றனர். இரவு சயன கோலத்தில் பட்டுப்பல்லக்கில் எழுந்தருளினார்.
இன்று (ஆக., 16ல்) காலை தீர்த்த வாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும், ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.